காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க வேண்டும் என்ற சீனா, பாகிஸ்தான் நாடுகளின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சலில் இன்று ஆலோசனை நடந்தது.
அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ஏற்கனவே மத்திய அரசு, உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் கடிதம் எழுதியிருந்தது. இதனை சீனாவும் ஆதரித்துள்ள நிலையில், இன்று போலந்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரகசிய விவாதம் நடைபெற்றது.
இந்த கவுன்சிலில் சீனா, அமெரிக்கா பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நிலையில், சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.