சீனாவில் தேவாலயங்களில் அகற்றப்படும் சிலுவை - வீடுகளில் இயேசு படத்தை நீக்கி கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவு

சீனாவின் சில பகுதிகளில் அதிகாரிகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும், வீட்டில் உள்ள இயேசுவின் படங்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் தேவாலயங்களில் அகற்றப்படும் சிலுவை - வீடுகளில் இயேசு படத்தை நீக்கி கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவு
அகற்றப்படும் சிலுவை மற்றும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் படம்
  • News18
  • Last Updated: July 22, 2020, 3:03 PM IST
  • Share this:
சீனாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த நிலையில், சில இடங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் உள்ள இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் படங்களை வைக்கச் சொல்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’டெய்லி மெயில்’ தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், அன்ஹுய் ஜியான்ங்சு, ஹேபேய் மற்றும் ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் அதிகாரிகள், தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மாகாணமான ஷாங்ஹியில், இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
அதிகாரிகள் உத்தரவை அடுத்து, சில தேவாலய கோபுரங்களில் இருந்த சிலுவைகள் அகற்றப்பட்டுள்ளன. சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading