• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்ட சீனா... இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரிப்பு - பென்டகன் அறிக்கை

உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்ட சீனா... இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரிப்பு - பென்டகன் அறிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

அமெரிக்க கடற்படையில் 293 போர்க்கப்பல்களே இருக்கும் நிலையில், சீனாவிடம் 350 போர்க் கப்பல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Share this:
    உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா பெற்றிருப்பதாகவும், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் தனது ராணுவத்தை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீனாவின் கடற்படை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், அமெரிக்க கடற்படையில் 293 போர்க்கப்பல்களே இருக்கும் நிலையில், சீனாவிடம் 350 போர்க் கப்பல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த 11 விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும் நிலையில், சீனாவிடம் எட்டுதான் உள்ளன.

    இதனால், இன்னும் இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை கட்டுவதற்கு சீனா தயாராகி வருவதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. மேலும், நீண்ட தொலைவு ஏவுகணைகள், கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மின்னணு போர் திறன்கள் என்று சீனா தன்னை பலப்படுத்திக் கொண்டு வருவதாகவும், அணுசக்தி போர் தளவாடங்களை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

    அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ராணுவத் தளங்களை பயன்படுத்தி வரும் சீனா, தற்போது மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சிஷல்ஸ், தான்சான்யா, அங்கோலா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் புதிய ராணுவ தளங்களை அமைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்தோ - பசிபிக் பகுதிகளில் சீனா ராணுவ தளத்தை அமைத்து வருவது இந்தியாவுக்கு ஆபத்தானது என்று பென்டகன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவின் அணுசக்தி பலம் என்பது நிலம், கடல், வான் என்று அடுத்த பத்தாண்டுகளில் வலுவடையும் என்றும், சீனா தனது படை பலத்தை நவீனமயமாக்குதல், பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் கராச்சி மற்றும் குவாடர் துறைமுகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள சீனா, பாகிஸ்தானுக்கும் போர் தளவாடங்களை கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாகவும், இதுவும் இந்தியாவுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கும் என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது.



    மேலும், இந்தியாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பல், 35 போர்க்கப்பல்கள் மற்றும் 17 நீர் மூழ்கிக் கப்பல்கள் மட்டுமே இருப்பதாக பெண்டகன் கூறியுள்ளாது. எனவே, சீனாவின் பலம் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் செய்தியாக இருக்கிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: