ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் தொழில்நுட்ப ஜாலங்களுடன் முயல் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்த மக்கள்!

சீனாவில் தொழில்நுட்ப ஜாலங்களுடன் முயல் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்த மக்கள்!

சீன புத்தாண்டு கொண்டாட்டம்

சீன புத்தாண்டு கொண்டாட்டம்

China New Year 2023 | ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள சீனர்களும், முயல் புத்தாண்டை வரவேற்று, பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internati, Indiachinachinachinachinachina

சீனாவில் தொழில்நுட்ப ஜாலங்களுடன் முயல் புத்தாண்டை வரவேற்று, கொண்டாட்டங்கள் களைகட்டின.

சீனாவில் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு புத்தாண்டு கொண்டாடப்படுவதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்குகளின் பெயரில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு வசந்த காலத்தை வரவேற்கும் நிகழ்ச்சியுடன் சீனப்புத்தாண்டும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இணைந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பல்வேறு பின்னணிகளுடன் உருவாக்கப்பட்ட மேடையில், அழகழகாய் முயல் போல உடையணிந்த சின்னஞ்சிறார் விழாவை அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து, சீனாவின் பாரம்பரிய ஆடல், பாடல் மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. அதேபோல், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுடன் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சீனாவைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான தைவான் மற்றும் ஹாங்காங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. பொதுமக்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, முயல் புத்தாண்டை வரவேற்றதோடு, புத்த ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினர்.

செர்பியா தலைநகர் பெல்கிரேடில் சீன புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெல்கிரேடில் நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது, வாண வேடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டன. இதில், செர்பியா பிரதமர் அனாவும், சீன தூதர் சென்போவும் பங்கேற்றனர். அத்துடன், சீனக் கலைஞர்கள் நிகழ்த்திய சிங்க நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதேபோல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள சீனர்களும், முயல் புத்தாண்டை வரவேற்று, பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

First published:

Tags: China