சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து பரவத் தொடங்கிய டெல்டா வகை வைரஸே இந்த பரவலுக்கு காரணம் என்றும் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதன்முதலில் அக்டோபர் 16 அன்று வடக்குப் பகுதிகளுக்குப் பயணம் செய்த ஷாங்காய்விலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மூத்த குடிமக்களின் சுற்றுலாக் குழுவில் கண்டறியப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பதிவான 133 நோய்த்தொற்றுகளில், 106 பேர் 13 சுற்றுலாக் குழுவுடன் தொடர்பு உடையவர்கள் ஆவர்.
அக்டோபர் 17ம் தேதி தொடங்கி அங்கு கொரோனா பரவல் எண்ணிக்கை உயரத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு எடுத்து வருகிறது. சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.
சீனாவில் தற்போதைய கொரோனா பரவலுக்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து பரவிய டெல்டா வைரஸ் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரியான வு லியாங்யூ கூறுகிறார். தொற்று அலை 11 மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபென் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கொரோனா..மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை: சீனா
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் "அவசரகால நிலையை" பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.கன்சு மாகாணத்தின் தலைநகர் லான்ஜோ உட்பட சில நகரங்கள் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகள் ஆகியவை வைரஸ் காரணமாக பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளை நிறுத்தியுள்ளன என்று போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரி சோவ் மின் கூறுகிறார்.
மேலும் படிக்க: உணவு பஞ்சத்தில் தவிக்கும் ஆப்கானிஸ்தான்...பல லட்சம் பேர் இறக்க நேரிடும்: ஐ.நா. எச்சரிக்கை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Corona spread, CoronaVirus