சீனாவில் கடந்த 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தியபடி உள்ளது. இந்த நிலையில் உருமாறிய பிஎஃப் .7 கொரோனா வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது மீண்டும் கலக்கமடையச் செய்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கோவிட் பாலிசி, ஜீரோ கோவிட் பாலிசி எனப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டது.
அதன்பிறகு சீனாவில் மளமளவென கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் நடத்திய 20 நிமிடக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு ஆவணத்தை ரேடியோ ஃப்ரி ஆசியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர, அது தற்போது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க; சீனாவில் மீண்டும் தீயாய் பரவும் கொரோனா தொற்று: புதிய வகை தொற்றால் இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து?
டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணம் சொல்கிறது. இது சீனாவின் மக்கள் தொகையில் 17.65 சதவிகிதம் என்பது கவனிக்கத்தக்கது. டிசம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ரேடியோ ஃபிரி ஆசியா மதிப்பிட்டுள்ளது.
Nearly 250 million Covid-19 infections in China: Leaked document
Read @ANI Story | https://t.co/iyzmunwJWq#Covid19 #China #coronavirus pic.twitter.com/Y9yGoXgfOY
— ANI Digital (@ani_digital) December 24, 2022
அதே சமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்கிற சுகாதார நிறுவனம் இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளது. அது, சீனாவில் தினமும் ஒரு கோடி பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்றும் 5,000 க்கும் மேல் உயிரிழப்புகள் இருந்திருக்கலாம் எனவும் கூறுகிறது. வரும் ஜனவரியில் நாள்தோறும் 37 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், மார்ச் மாதம் நாள்தோறும் 42 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, CoronaVirus, Omicron BF 7 Variant