Home /News /international /

வீடியோகேமில் பிரமாண்டம்... சீனாவில் மக்களை வெகுவாக கவர்ந்த மெட்டாவர்ஸ் தொழில்நுட்பம்

வீடியோகேமில் பிரமாண்டம்... சீனாவில் மக்களை வெகுவாக கவர்ந்த மெட்டாவர்ஸ் தொழில்நுட்பம்

செல்போன்களில் நாம் விளையாடும் fruit crush விளையாட்டை, மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுள்ளது. இந்த விளையாட்டை பலரும் ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaChina China China
    சீனாவில் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ள மைதானத்தில் விளையாடக் கூடிய வீடியோ கேம்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    சீன தலைநகர் பெய்ஜிங்கில், 2022ஆம் ஆண்டின் சேவை வர்த்தகத்திற்கான சர்வதேச கண்காட்சி வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், மெய்நிகர் உலகம் எனப்படும் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 4,300 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ கேம் மைதானம் பலரையும் கவர்ந்துள்ளது. இது விளையாட்டு மைதானமா? அல்லது வீடியோ கேமா எனக் கேட்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்திற்குள் நுழைந்தவுடன், விளையாட்டுகள் தொடங்கி விடுகின்றன.

    Also Read : பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை.. 1200-ஐ தாண்டிய உயிரிழப்பு

    மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மைதானத்திற்குள் நுழைந்தவுடன் ஹெட்செட் அல்லது தற்போது இருக்கும் வீடியோ கேம்களைப் போல வேறு எதையும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதுதான் இதில் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது.

    செல்போன்களில் நாம் விளையாடும் fruit crush விளையாட்டை, மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுள்ளது. இந்த விளையாட்டை பலரும் ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர். அத்துடன் பனிச்சருக்கு போன்ற பல்வேறு மெய்நிகர் விளையாட்டுகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 2000- திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில், நடனமாடும் ரோபோக்களும் இடம்பெற்றுள்ளன.

    Published by:Josephine Aarthy
    First published:

    Tags: China, Metaverse

    அடுத்த செய்தி