ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒரே நாளில் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கலாம்..சீனாவை எச்சரிக்கும் ஆய்வு

ஒரே நாளில் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கலாம்..சீனாவை எச்சரிக்கும் ஆய்வு

சீனாவில் புதிய கொரோனா அலை

சீனாவில் புதிய கொரோனா அலை

சீனாவில் நாள்தோறும் தினசரி பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கூட தொடலாம் என்று ஆய்வு எச்சரிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaBeijingBeijingBeijingBeijing

சீனாவில் ஏற்பட்டுள்ள புதிய கோவிட் அலை சர்வதேச நாடுகளை மீண்டும் பீதியடைய வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் சீனாவும், கொரோனாவும் மீண்டும் தலைப்பு செய்திகளாக மாறி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளன. இந்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில், முககவசம், தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. அங்கு, உருவமாறிய BF.7 என்ற கொரோனா பரவுவதாக பெருந்தொற்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் சீனாவில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகின்றன. அங்குள்ள மயானங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த Airfinity Ltd.என்ற ஆய்வு அமைப்பு சீனாவின் கோவிட் பரவல் நிலவரம் குறித்து ஆய்வு செய்து எதிர்கால சூழல் குறித்து கணித்துள்ளது.அதன்படி, சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் நாள்தோறும் தினசரி பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கூட தொடலாம் என்று எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: 30 போர் விமானங்களை பறக்க விட்டு சீண்டும் சீனா.. அச்சத்தில் தைவான்

குறிப்பாக, வரும் ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை அந்நாட்டில் கோவிட் அலை உச்சத்தில் இருக்கும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல், தினசரி உயிரிழப்பும் 5,000 தாண்டும் என ஆய்வு எச்சரித்துள்ளது. சீனா அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி, கடந்த புதன்கிழமை தினசரி பாதிப்பு 2,966 என்றும் உயிரிழப்பு 10க்கும் குறைவாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் நிலவரம் மோசமாக உள்ளதாகவும் அதை சீனா வெளிகாட்ட மறுப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

First published:

Tags: China, Corona, Corona Vaccine, CoronaVirus, Covid-19