• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவில் ஒரு ‘பரோட்டா சூரி’ சம்பவம்... பஃபேயில் அதிகம் சாப்பிட்டதால் மிரண்டு போன பிரபல உணவகம்..

சீனாவில் ஒரு ‘பரோட்டா சூரி’ சம்பவம்... பஃபேயில் அதிகம் சாப்பிட்டதால் மிரண்டு போன பிரபல உணவகம்..

Parotta suri

Parotta suri

இறால்களை குச்சியில் எடுத்து தான் தின்பார்கள், ஆனால் இவர் முழு ட்ரேயையும் சாப்பிட்டுவிடுகிறார். இவர் மட்டுமல்ல என் கடைக்கு இனி எந்த யூடியூபரும் வந்து உணவருந்த தடை விதித்துள்ளேன் என்றார் உணவக உரிமையாளர்.

  • Share this:
‘பரோட்டா சூரி’ சம்பவம் போல சீனாவில் உள்ள பிரபல உணவகத்தின் பஃபேயில் அதிக உணவுகளை தின்று தீர்த்த நபரை இனி உணவகத்துக்கே வரவேண்டாம் என அவரை கருப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது பிரபல உணவகம் ஒன்று.

வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு காட்சி உண்டு, அதில் ஓட்டல் ஒன்றின் உரிமையாளர் பரோட்டா பந்தயம் ஒன்றை வைப்பார். தனது கடையில் 50 பரோட்டா சாப்பிட்டு பந்தயத்தில் ஜெயித்துவிட்டால் சாப்பிட்ட பரோட்டாவுக்கு காசு வேண்டாம் 100 ரூபாய் பரிசு தருவதாக கூறுவார்.. ஒருவேளை 50 பரோட்டா சாப்பிடமுடியவில்லை என்றால் 100 ரூபாயை பந்தயத்துக்கு வந்தவர் தரவேண்டும், மேலும் சாப்பிட்ட பரோட்டாக்களுக்கு காசும் தரவேண்டும் என்பார். அந்த பந்தயத்தில் ஒல்லியாக இருக்கும் சூரி 50 பரோட்டா சாப்பிட்டு உணவக உரிமையாளரை அரண்டுபோக வைத்திருப்பார். இது தான் நடிகர் சூரியை ‘பரோட்டா சூரி’ ஆக பிரபலமாக்கிய காட்சி.

சீனாவில் இதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக உணவகங்களில் பஃபே என ஒரு முறை உண்டு. குறிப்பிட்ட தொகையை கட்டிவிட்டால் அங்குள்ள பலவிதமான உணவுகளை இஷ்டம் போல அளவே இல்லாமல் சாப்பிடலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரே தொகை தான். சீனாவில் உள்ள பிரபல சங்கிலித் தொடர் உணவகமான Handadi Seafood BBQ என்ற கடைக்கு காங் என்ற யூடியூபர் வாடிக்கையாக செல்வதுண்டு. இவர் நம்மூர் சூரி போல அளவே இல்லாமல் சாப்பிடக் கூடியவர் போலும்.

Buffet


சங்ஷா நகரில் உள்ள அக்கடைக்கு சென்று சமீபத்தில் பிளேட் பிளேட் ஆக உணவு வகைகளை சாப்பிட்டு துவம்சம் செய்ததால் இனி யூடியூபர் காங் தங்கள் கடைக்கு வரக்கூடாது என அவரை கருப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த காங், அங்குள்ள தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், என்னால் அதிகமாக சாப்பிட முடியும். அது தவறா? நான் உணவு எதையும் வீணடிக்கவில்லை.

Also read: 40,000 தமிழக பிராமண இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிப்பு - வடமாநிலங்களில் பெண் தேடும் நிலை

முதல் முறை அந்த உணவகத்துக்கு சென்றபோது 1.5 கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டேன். அடுத்த முறை சென்ற போது சுமார் 3.5ல் இருந்து 4 கிலோ இறால் சாப்பிட்டேன். அதிகமாக சாப்பிடுபவர்கள் உணவகத்துக்கு வரக்கூடாது என கூறுவது பாரபட்சமானது என்றார்.

ஆனால் அதே தொலைக்காட்சிக்கு உணவக உரிமையாளர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு முறை யுடியூபர் காங் எங்கள் கடைக்கு வருகை தரும்போதும் நான் நஷ்டத்தை சந்திக்கிறேன். ஒரு தடவை வருகை தந்தால் 20 முதல் 30 பாட்டில்கள் சோயா பால் குடிக்கிறார். பன்றி இறைச்சி இருக்கும் முழு ட்ரேயையும் காலி செய்துவிடுகிறார். இறால்களை குச்சியில் எடுத்து தான் தின்பார்கள், ஆனால் இவர் முழு ட்ரேயையும் சாப்பிட்டுவிடுகிறார். இவர் மட்டுமல்ல என் கடைக்கு இனி எந்த யூடியூபரும் வந்து உணவருந்த தடை விதித்துள்ளேன் என்றார்.

சீனாவின் ஃபேஸ்புக்கிற்கு நிகரான வெய்போ சமூக வலைத்தளத்தில், இந்த பேட்டிகளை 250 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: