அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் தலைநகரான தைபேயில் சீனாவின் எதிர்ப்பை மீறித் தரையிறங்கிய நிலையில் தற்போது சீனா தைவான் மேல் வர்த்தக தடை விதித்துள்ளது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தற்போது சீனா உரிமை கொண்டாடும் தைவானின் தனித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனா தைவானை உரிமை கொண்டாடும் நிலையில் அமெரிக்காவின் இந்த சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் நான்சி பெலோசி தைவானில் முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளார்.
தைவான் விஷயத்தில் தலையிடுவது அமெரிக்கா தீயினில் விளையாடுவதற்குச் சமம் என்று எச்சரித்த போதிலும் தைவானில் தனித்துவத்தையும் ஜனநாயகத்தையும் அமெரிக்கா ஆதரிக்கும் என்று நான்சி தெரிவித்தது மேலும் நிலைமையைப் பரபரப்பாகியது.
இந்த நிலையில் சீனா தைவான் மேல் வர்த்தக தடை போட்டுள்ளது. தைவானில் உற்பத்தியாகும் பெரும்பான்மையான பொருட்கள் தடையில் இடம்பெற்றுள்ளது. தைவானிலிருந்து இறக்குமதி ஆகும் 2000 பொருட்களுக்கும் 3200 உணவுப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன், எண்ணெய், பழங்கள், காய்கறிகள், கடலில் கிடைக்கும் உணவுகள் மேலும் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ளது. தைவானுக்கு உணவு மற்றும் விவசாய பொருட்களுக்குச் சீனா பெரிய நுகர்வோர் என்பதால் இந்த செயல் தைவானில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.