முகப்பு /செய்தி /உலகம் / எல்லைப் பாதுகாப்பு படைகளுக்காக குளிர்-தடுப்பு ஆடைகளை அறிமுகப்படுத்திய சீனா

எல்லைப் பாதுகாப்பு படைகளுக்காக குளிர்-தடுப்பு ஆடைகளை அறிமுகப்படுத்திய சீனா

 குளிர்-எதிர்ப்பு ஆடைகள் உட்பட பல நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்திய சீனா

குளிர்-எதிர்ப்பு ஆடைகள் உட்பட பல நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்திய சீனா

இந்த வெதுவெதுப்பான, லைட் வெயிட் ஆடைகள் மற்றும் உபகரணங்களை ராணுவ மற்றும் சிவிலியன் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சீனா சமீபத்தில் புதிய குளிர்-தாங்கும் ஆடைகள் (cold-resistant clothing) மற்றும் உபகரணங்களை சமீபத்தில் உருவாக்கி இருக்கிறது. தங்களது எல்லைகளை பாதுகாக்கும் பணிகளுக்காக உயரமான பனி சிரம் மற்றும் பீடபூமி பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சீன எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், கடுங் குளிரை சமாளிக்க உதவும் வகையில் கோல்ட்-ரெசிஸ்டன்ட் ஆடைகளையும், உபகரணங்களையும் சீனா உருவாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 2-வது ஆண்டாக பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஆடைகள் மற்றும் உபகரணங்களை சீன மேம்படுத்தி இருப்பது, சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (People's Liberation Army) எல்லைப் பாதுகாப்புப் படைகளின் வாழ்க்கைத் தரம் மற்றும் இந்தியாவுடனான எல்லை மோதலுக்கு மத்தியில் போர் திறனை அதிகரிப்பது உள்ளிட்டவற்றில் சீனா கவனம் செலுத்துவதை காட்டுவதாக குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. மத்திய ராணுவ ஆணையம் (Central Military Commission) லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட்டால் உருவாக்கப்பட்டிருக்கும் 10 வகையான புதிய ஆடைகள் மற்றும் உபகரணங்கள், தங்கள் நாட்டின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சீனாவின் PLA Daily சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக PLA Daily வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உயர் தொழில்நுட்பங்களை கொண்ட, இந்த வெதுவெதுப்பான, லைட் வெயிட் ஆடைகள் மற்றும் உபகரணங்களை ராணுவ மற்றும் சிவிலியன் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்கள் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடும் குளிர் சூழலில் பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வலுவான ஆதரவை இவை வழங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கஸ்டமைஸ்டு கோல்ட்-ரெசிஸ்டன்ட் உடைகள் மற்றும் ஸ்லீப்பிங் பேக்ஸ், டவுன் டிரெய்னிங் கோட்ஸ் மற்றும் டவுன் காட்டன் பேடட் ஜாக்கெட்ஸ் மற்றும் பேன்ட்ஸ் உள்ளிட்ட உபகரணங்களை அறிமுகப்படுத்திய பிறகு தற்போது CMC லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட்டிங் டிப்பார்ட்மெண்ட்டானது , இந்த ஆண்டுக்கான புதிய உபகரணங்களை ஆராய்ச்சி செய்து உருவாக்கி இருக்கிறது.

ALSO READ |  பிளாஸ்டிக் கழிவுகளால் அழியும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்.! கலைப்படைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷுவல் ஆர்ட்டிஸ்ட்

இந்த பட்டியலில் காட்டன் பேடட் கோட்ஸின் லாங் வெர்ஷன், தெர்மோஸ் பிளாஸ்க், ஆன்டி-ஃபிராக்மென்ட் கிளாசஸ், எலெக்ட்ரிக்கலி ஹீட்டட் கிளவுஸ்கள், முழங்கால் கேப்கள் (kneecaps) மற்றும் ஷூ-பேட்ஸ்(shoe-pads) மற்றும் ஸ்னைப்பர் வீரர்களுக்கான உருமறைப்பு உடை (camouflage suit) உள்ளிட்டவையும் அடக்கம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கோட் ஆப்டிமைஸ்டு தெர்மல் மெட்டீரியல் (optimized thermal material) மற்றும் மேம்படுத்தப்பட்ட டிசைன் கொண்டுள்ளது. எனவே இது தந்திரோபாய நகர்வின் போது வார்ம்மாகவும், பிராக்டிகலாகவும் இருக்கும்.

அதே போல தெர்மோஸ் பிளாஸ்க் அதன் கேப்பில் தண்ணீர் வெப்பநிலையை காட்டும் ஸ்மார்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. லைட்வெயிட் அதே சமயம் அதிக வலிமை கொண்ட டைட்டானியம் அலாய் பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டு உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 3 ஆண்டுகளாக சீன ராணுவம் நவீனமயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: China