அமெரிக்கா பயணமா? எச்சரிக்கை தேவை!- குடிமக்களுக்கு சீனா அட்வைஸ்!

பாதுகாப்பு என்பதே அமெரிக்காவில் கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் தன் மக்களிடம் சீன அரசு தெரிவித்து வருகிறது.

Web Desk | news18
Updated: June 5, 2019, 4:31 PM IST
அமெரிக்கா பயணமா? எச்சரிக்கை தேவை!- குடிமக்களுக்கு சீனா அட்வைஸ்!
மாதிரிப்படம்(Reuters)
Web Desk | news18
Updated: June 5, 2019, 4:31 PM IST
துன்புறுத்துல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை யோசித்த பின்னர் சீனர்கள் அமெரிக்கப் பயணத்தைக் குறித்து யோசிக்கலாம் என தன் நாட்டு மக்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் படிக்கும், படிக்க நினைக்கும் சீன மாணவர்களை எச்சரித்த சீனா, அடுத்த நாளே அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தன் மக்களையும் எச்சரித்துள்ளது. அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் உச்சம் பெற்று வருவதால் தன் மக்களை அறிவுறுத்தத் தொடங்கியுள்ளது அந்நாடு.

சீனாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகமே இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு, கொலை, கொள்ளை நடைபெறுவதாகவும், இதனால் பாதுகாப்பு என்பதே அமெரிக்காவில் கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் தன் மக்களிடம் சீன அரசு தெரிவித்து வருகிறது.

‘அமெரிக்க எச்சரிக்கை’-யை இந்த ஆண்டின் இறுதி வரையில் பின்பற்றுவது நலம் என்றும் சீனாவில் அறிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் பார்க்க: சீன மாணவர்களை இழக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்?
First published: June 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...