• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • திபெத்தில் சீனா ரூ.10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவு..

திபெத்தில் சீனா ரூ.10 லட்சம் கோடி முதலீடு - ரயில் சேவை உட்பட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவு..

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

திபெத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சீனா 10 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவுடன் நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்ளும் திபெத்தின் தென்கிழக்குப் பகுதியான நிங்சியை ரயில் மூலம் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து நிங்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



    இத்திட்டத்தின் சவாலான பகுதியாக கருதப்படும் செங்டு முதல் லாசா வரை பாதை அமைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதேபோன்று மற்றொரு அண்டை நாடான நேபாளத்தில் இருந்து திபெத்தின் 2-வது பெரிய நகராக உள்ள சிகாட்சே-க்கு (Shigatse) ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

    Also read: இந்திய-ரஷ்ய கடற்படைகள் வங்கக்கடல் பகுதியில் போர் ஒத்திகை...

    இந்தியாவுடன் எல்லையில் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனா, இந்தியாவை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக பல லட்சம் கோடி செலவில் இத்திட்டங்களைச் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: