ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..!

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ரத்து..!

இந்திய தூதரகம்

இந்திய தூதரகம்

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சீனாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் நாளை நடைபெற இருந்த குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  பறவைகள், பாலூட்டிகளிடமிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

  இந்நிலையில் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து வந்த செய்திக் குறிப்பில் “ சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் அதிகாரிகள் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருகின்றனர். எனவே வரும் 26- ஆம் தேதி இந்தியத் தூதரகத்தில் கொண்டாடப்பட இருந்த குடியரசு தின நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன “ என்றுக் கூறப்பட்டுள்ளது.

  Published by:Sivaranjani E
  First published: