5 ஜி தொழில்நுட்பத்தால் 30 சதவிகிதம் உற்பத்தியை அதிகரித்த சீன தொழிற்சாலைகள்!

5 ஜி தொழில்நுட்பத்தால் 30 சதவிகிதம் உற்பத்தியை அதிகரித்த சீன தொழிற்சாலைகள்!
5ஜி
  • News18
  • Last Updated: June 7, 2019, 2:24 PM IST
  • Share this:
சீனாவில் 5 ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் 2 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மிக அதிவேக இணையத்தின் உதவியால் 30 விழுக்காடு வரை செயல்திறன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

5 ஜி தொழில்நுட்பத்தை உற்பத்தி, மருத்துவம் என சகல துறைகளிலும் சீனா செயல்படுத்தி வருகிறது. அதிவேக இணையத்தின் உதவியுடன் மருத்துவத்துறையிலும் பல புதுமைகள் சீனாவில் புகுத்தப்பட்டுள்ளன.

சீனா மொபைல் என்ற நிறுவனத்துடன் இணைந்து மத்திய சீனாவில் இயங்கி வரும் நிறுவனம் 5 ஜி ஆண்டனாவை மிக நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்து வருகிறது. இதேபோல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற மணிக்கணக்கில் காத்திருக்கும் அவசியமும் இல்லாத வகையில், ஆன்லைனில் ஆலோசனை நடத்தும் வசதியையும் 5 ஜி தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது.


மேலும், 2 அரசு தொழிற்சாலைகள் 5 ஜி தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தியதால், 30 சதவிகித செயல்திறன் அதிகமாகியுள்ளது.
First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading