Home /News /international /

சீனாவின் லேசர் பிக்பாஸ் - 1.3 கி.மீ அப்பால் மறைந்திருந்தாலும் கண்டுபிடிக்கலாம்!

சீனாவின் லேசர் பிக்பாஸ் - 1.3 கி.மீ அப்பால் மறைந்திருந்தாலும் கண்டுபிடிக்கலாம்!


சீனாவின் லேசர் பிக்பாஸ்

சீனாவின் லேசர் பிக்பாஸ்

1.3 கிலோ மீட்டருக்கு அப்பால் மறைந்திருக்கும் ஒரு நபர் அல்லது பொருளை லேசர் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

1.3 கிலோ மீட்டருக்கு அப்பால் மறைந்திருக்கும் ஒரு நபர் அல்லது பொருளை லேசர் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தொழில்நுட்ப துறையில் அட்வான்ஸ் டெக்னாலஜியை அறிமுகப்படுத்துவதில் சீனா எப்போதும் முன்னோடியாக இருக்கிறது எனலாம். அந்தவகையில் தற்போது புதுமையான டெக்னாலஜி ஒன்றை அந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுமார் 1.3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நபர் அல்லது பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் லேசர் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லைன் ஆப் சைட் (line of sight) என்ற வார்த்தை புகைப்பட துறையில் பொதுவாக பயன்படுத்தப்படும். ஒளியின் மூலம் தொலைவில் இருக்கும் பொருளை அடையாளப்படுத்துவது. கேமரா, டெலஸ்கோப், நமது கண் ஆகியவை இந்த வகையில் அடங்கும். ஆனால், நான் லைன் ஆப் சைட் (non-line-of-sight (NLOS) என்பது புதிய கண்டுபிடிப்பாக ஒளியியல் துறையில் பார்க்கப்படுகிறது. அதாவது ஒளியின் பார்வையில் இல்லாத நபர் அல்லது மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், நான் லைட் ஆப் சைட் என அழைக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : மாஸ்க் கேள்வி பட்டிருக்கோம், அது என்னப்பா ‘கோஸ்க்’ - இது தென் கொரியாவின் அட்ராசிட்டி…

இந்த மாடலை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தாலும், அவற்றின் மேம்பட்ட வடிவமாக இந்த புதிய கண்டுபிடிப்பு உள்ளது. ஏற்கனவே உள்ள டெக்னாலஜியில் (Technology) குறிப்பிட்ட தொலைவு அல்லது மீட்டர்களில் இருக்கும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஆனால், புதிய கண்டுபிடிப்பில் 1.3 கிலோ மீட்டர் தொலைவில் மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (University of Science and Technology of China) சார்பில் தேசிய அறிவியல் ஆய்வகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



ஷாங்காயில் உள்ள பல்கலைக்கழகத்தில் லேசர் வைக்கப்பட்டது. சுமார் 1.43 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு அப்பார்ட்மென்ட்டில், பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டது. அங்கிருந்து லேசர் செலுத்தப்பட்டதில், மறைத்து வைக்கப்பட்ட பொருளின் மீது ஃபோன்டோன்கள் பட்டு பிரதிபலித்தன. பொருள்கள் மீது ஒளி படும்போது சிதறியது. கம்பயூட்டரின் உதவிகொண்டு பகுப்பாய்வு செய்யும்போது பொருள் சுவற்றுக்கு பின்னால் இருப்பது சரியாக உறுதிசெய்யப்பட்டது. இந்த வீடியோ சவுத் சைனா மார்ன்னிங் போஸ்ட் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது,

இதையும் படியுங்கள் : டெல்டா வேரியன்டை மீண்டும் மனிதர்களுக்கு பரப்பும் ஹாம்ஸ்டர்கள்.! ஆய்வில் வெளியான பகீர் தகவல்

புதிய தொழில்நுட்பம் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், ராணுவ நடவடிக்கையை முன்கூட்டியே கணிக்கவும் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொள்ளையடித்த பொருட்களை மறைத்துவைத்திருந்தாலும், ஆட்கள் மறைந்திருந்தாலும் அவர்களை பிடிக்க இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என கூறியுள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: China

அடுத்த செய்தி