முகப்பு /செய்தி /உலகம் / சீனாவில் அதிகரிக்கும் கொரோனா... பள்ளிகளை மூட உத்தரவிட்ட அரசு..!

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா... பள்ளிகளை மூட உத்தரவிட்ட அரசு..!

சீனாவில் மீண்டும் கொரோனா மற்றும் flu, noro virus ஆகியவை அதிகரித்து வருவதால் சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் மீண்டும் கொரோனா மற்றும் flu, noro virus ஆகியவை அதிகரித்து வருவதால் சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சீனாவில் மீண்டும் கொரோனா மற்றும் flu, noro virus ஆகியவை அதிகரித்து வருவதால் சில நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • internationa, IndiaChinaChina

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று 2 வருடங்கள் கடந்தும் இன்னும் சில நகரங்களை வாட்டி வதைத்து வருகிறது. சில முக்கிய நகரங்களில் கொரோனாவுடன் இதர பருவகால நோய்த் தொற்றுகளும் வேகமாகப் பரவி வரும் நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

ஹாங்க்சவ் நகரில் 2ம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு வேகமாக கொரோனா பரவியதால் அங்குள்ள பள்ளி வகுப்புகள் 4 நாட்கள் நடைபெறவில்லை. ஷாங்காய் நகரில் ஆரம்பப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. கோவிட் 19 மற்றும் flu, noro virus ஆகியவை இணைந்து தாக்குவதால் எச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாட்டு நோய்த் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சீனாவில் தினசரி சுமார் 10,000 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மீண்டும் பரவும் கொரோனா... சீனாவில் பள்ளிக் கூடங்களை மூட அதிரடி உத்தரவு..!

பள்ளி குழந்தைகளுக்கு அதிகளவில் தற்போது கொரோனா மற்றும் இதர வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றது என்றும் பாதிப்பின் அளவு 0.7% இருந்து 3.4% அதிகரித்துள்ளதாகச் சீனா நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: China, Corona, Flu Vaccine