Home /News /international /

சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுண் அச்சத்தில் மக்கள்

சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுண் அச்சத்தில் மக்கள்

சீனா

சீனா

Corona in China | ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், ஜிலின், ஷென்சென், டங்குவான் ஆகிய சீன நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சீனாவில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சீனாவின் வூஹான் மாகாணத்தில்  கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, படிப்படியாக குறைந்தது.

    இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பதிவாகும். குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் மட்டும் மூவாயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், ஜிலின், ஷென்சென், டங்குவான் ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    Also Read: சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் சீனா பல நகரங்களை முடக்கி வருகிறது.  அதிக வேகத்துடன் பரவும் ஒமைக்கரானே பாதிப்பு அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். . உயர் தொழில்நுட்ப நகரமான ஷென்சென்-னில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 1 கோடியே 70 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஷென்சென்-னில் ஒரு வார காலத்திற்கு பேருந்தும் மெட்ரோ ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் ஜிலின், என்சைம் நகரங்களும் முடக்கப்படுள்ளன.

    ஊரடங்கு மட்டுமல்லாமல், பரிசோதனைகளை அதிகரிக்கவும் சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தொற்று பாதிப்பை விரைவாக கண்டறியும் வகையில் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 30 நிமிடங்களில் முடிவுகளை தெரிந்துகொள்ள வழிவகை செய்யும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு சீன அரசு இதுவரை தடை விதித்திருந்தது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: China, Corona, CoronaVirus, Covid-19, Wuhan

    அடுத்த செய்தி