133 பேருடன் சென்ற சீன விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவின் குன்மிங் மாகாணத்தில் இருந்து குவாங்சோ மாகாணத்திற்கு, 133 பேருடன் இந்திய நேரப்படி காலை10.41-க்கு ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது. காலை 11.52 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து விமானத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டன.
மதியம் 12.35-க்கு குவாங்சோ மாகாணத்தை விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க - உக்ரைன் மீதான போரில் இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு - ஐ.நா. சபை தகவல்!
விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குவாங்சி மாகாணத்தில், வுசோ நகரத்திற்கு அருகே உள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க - பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து... மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை
இதுதொடர்பாக பொதுமக்கள் எடுத்த வீடியோ பதிவுகள் வைரலாகியுள்ளன. விபத்தை தொடர்ந்து சீன பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க - ரஷ்யாவுடன் ஒப்பந்தம்.. மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அரசியலாக்க வேண்டாம் - இந்தியா எச்சரிக்கை
முதற்கட்ட தகவல் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.