ஹோம் /நியூஸ் /உலகம் /

வடகொரியாவில் இருந்து காத்து வாக்கில் பரவுமா கொரோனா.. ஜன்னலை மூடி வைக்க சொன்ன சீனா!

வடகொரியாவில் இருந்து காத்து வாக்கில் பரவுமா கொரோனா.. ஜன்னலை மூடி வைக்க சொன்ன சீனா!

வடகொரிய மூலம் கோவிட் பரவும் என சீனா அச்சம்

வடகொரிய மூலம் கோவிட் பரவும் என சீனா அச்சம்

டேன்டோங் என்ற எல்லை நகரத்தில் உள்ள மக்களை அவர்கள் வீட்டு ஜன்னல்களை திறக்காமல் மூடியே வைத்திருக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சீனாவும் வடகொரியாவும் அண்டை நாடுகளாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே யாலு என்ற நதி எல்லையாக இருந்து ஓடி வருகிறது. இரு நாடுகளிலும் தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சீனா அரசு ஜீரோ கோவிட் யுக்தி என்ற பெயரில், அந்நாட்டில் குறைந்த அளவில் பாதிப்பு ஏற்பாட்டாலும் பெரிய அளவிலான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பக்கத்து நாடான வட கொரியாவில் இருந்து கோவிட் காற்று மூலமாகக் கூட பரவும் அபாயம் உள்ளது என்ற அச்சத்தில் சீன உள்ளது. எனவே, எல்லையில் உள்ள நகரங்களில் வித்தியாசமான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா வித்துள்ளது. எனவே, டேன்டோங் என்ற எல்லை நகரத்தில் உள்ள மக்களை அவர்கள் வீட்டு ஜன்னல்களை திறக்காமல் மூடியே வைத்திருக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. மேலும், யூலு நதிக்கு அருகே வசிப்பவர்கள் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

காற்றில் இது போன்று நோய் பரவும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த முடிவை சீனா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பான போர் சூழலுக்கு மத்தியில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கும் உக்ரைன் அதிபர்

இந்த நகரத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், தற்போது 850க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா அரசு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த நகர மக்கள் ஒரு வாரத்திற்கு மேலாக லாக்டவுனில் உள்ளனர். அதேபோல், ஷாங்காய் நகரத்தில் மீண்டும் 11 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், எட்டு மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு மாவட்டங்களில் உள்ள 1.53 கோடி மக்களை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: China, Covid-19, North korea