சீன அதிபர் ஜி ஜின்பிங் உறவினர் குறித்து செய்தி! செய்தியாளர் நாட்டிலிருந்து வெளியேற்றம்

அதற்கு ஆதாரமாக ஆஸ்திரேலிய அதிகாரிகள், கேசினோ ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக வெளியிடப்பட்டிருந்தது.

news18
Updated: August 31, 2019, 4:43 PM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங் உறவினர் குறித்து செய்தி! செய்தியாளர் நாட்டிலிருந்து வெளியேற்றம்
ஜி ஜின்பிங்
news18
Updated: August 31, 2019, 4:43 PM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உறவினர் குறித்து செய்தி வெளியிட்ட வால்ஸ்டிரிட் ஜர்னல்(Wall Street Journal) பத்திரிக்கையின் செய்தியாளர் சீனாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுப்பட்டுள்ளார்.

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி நடைபெற்றுவருகிறது. சீனா நாட்டைச் சேர்ந்த ஊடகங்களுக்கு அங்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஆளும் அரசு குறித்தும் அதிபர் குறித்தும் விமர்சனம் செய்யும் வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்காமல் அவர்களை திரும்ப அனுப்பும் முறை பின்பற்றப்பட்டுவருகிறது.

இந்தநிலையில் முதன்முறையாக, அமெரிக்காவின் வால்ஸ்டிரிட் ஜர்னல் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் சுன் ஹன் வோங், சீன அதிபர் ஜி ஜின்பிங் உறவினர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த சுன் ஹன் வோங், 2014-ம் ஆண்டிலிருந்து வால் ஸ்டிரிட் ஜர்னலுக்காக சீனாவிலிருந்து பணியாற்றிவருகிறார். அவர், சமீபத்தில் ஜின்பிங்கின் உறவினரும் ஆஸ்திரேலிய குடிமகனுமான ஆஸ்திரேயாலியாவில் மிகப் பெரிய அளவில் பண முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.


அதற்கு ஆதாரமாக ஆஸ்திரேலிய அதிகாரிகள், கேசினோ ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், சுன் ஹன் வோங்கின் விசா நீட்டிப்பு செய்யப்படாமல் சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘சில வெளிநாட்டு ஊடகங்கள் சீனாவின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. நாங்கள், அத்தகைய செய்தியாளர்களை விரும்புவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இந்தச் செயலுக்கு சீனாவின் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கான அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஆறு செய்தியாளர்களை சீனா வெளியேற்றியுள்ளது.

Also see:

Loading...

First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...