• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சரியும் சீன பொருளாதாரம்.. கொரோனாவை வென்றது.. மின்சாரத்திடம் தோற்றது..

சரியும் சீன பொருளாதாரம்.. கொரோனாவை வென்றது.. மின்சாரத்திடம் தோற்றது..

China economy

China economy

கொரோனாவுக்கு பின்னரும் பொருளாதார வளர்ச்சியை கண்ட ஒரே நாடாக திகழ்ந்தது சீனா மட்டுமே.

  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கூட மீண்டும் எழுந்து வந்த சீன பொருளாதாரம் தற்போது அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு என்ன காரணம்?

கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக நாடுகளை நடுங்கச் செய்தது கொரோனா வைரஸ் பாதிப்பு. சீனாவின் வூகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டன. இந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இன்னும் பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கொரோனா தொற்று மட்டுமல்லாது, தனது பொருளாதாரத்தையும் குறுகிய காலத்திலேயே சீனா மீட்டெடுத்தது.

மின்சாரத்திடம் தோற்றது..

பல நாடுகளின் பொருளாதாரமும் எதிர்மறை நிலைக்கு சென்ற போது கொரோனாவுக்கு பின்னரும் பொருளாதார வளர்ச்சியை கண்ட ஒரே நாடாக திகழ்ந்தது சீனா மட்டுமே.

Also read:  பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு இந்த பெண் தான் காரணமா? – பில் கேட்ஸை 2008ல் எச்சரித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

நிலைமை இப்படியிருக்க தற்போது சீன பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. 2021ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 4.9% என்ற அளவில் சீன பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இதுவே முதல் காலாண்டில் 18.3% ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.9% ஆக இருந்தது. அடுத்த காலாண்டில் சீன பொருளாதாரம் மேலும் நெருக்கடியை சந்திக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடுமையான மழை காரணமாக நிலக்கரிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதித்திருக்கிறது. சீனாவில் மின் தடை பிரச்னை அடுத்த ஆண்டு வரை நீடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மின் தடை காரணமாக தொழில்துறையினர் முடக்கப்பட்டுள்ளனர்.

Also read: தமிழகம் முதல் அசாம் வரை.. சொத்துக்களை வாங்கிய 12 மத்திய அமைச்சர்கள்!

ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி:

கொரோனாவை வென்ற சீனாவால் மின்சாரத்தை வெல்லமுடியவில்லை. சீனாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான மின் தடை ஏற்பட்டு வருகிறது. மின்வெட்டு பிரச்னையால் செப்டம்பர் மாதம் மிக மோசமான பாதிப்பை சீனா சந்தித்திருக்கிறது. இத்துடன் சீனாவின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் ரியல் எஸ்டேட் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளதால் ஜிடிபியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் துறை ஜாம்பவனான எவர்கிராண்ட் திவாலானதாக அறிவித்திருக்கிறது. இது சீன பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

Also read:   #RejectZomato ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்த தமிழர்கள் – மன்னிப்பு கேட்ட சொமோட்டோ நிறுவனம்!

எதிர்வரப்போவது குளிர்காலம் என்பதால், சீனா மேலும் கவலையடைந்துள்ளது. குளிர்காலத்தின் போது கொரோனா பரவல் வேகமெடுக்கும், அதே போல இன்ஃபுளூயன்ஸா பாதிப்பும் அதிகரிக்கக் கூடும். மின் வெட்டு பிரச்னையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை சீனா எடுத்து வந்த போதிலும், இதனால் சீன பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: