அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிடாததால் 30,000 உலக வரைபடத்தை அழித்த சீனா!

சீனாவிலிருந்து பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இருந்த 30,000 உலக வரைபடத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

news18
Updated: March 26, 2019, 4:51 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தைக் குறிப்பிடாததால் 30,000 உலக வரைபடத்தை அழித்த சீனா!
சீனக் கொடி
news18
Updated: March 26, 2019, 4:51 PM IST
அருணாச்சல பிரதேசத்தை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடாமல் அச்சிடப்பட்டிருந்த 30,000 உலக வரைபடத்தை சீனா அழித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான சீனா, வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் பகுதி என்று நீண்ட காலமாக கூறிவருகிறது. மேலும், அந்நாடு சார்பில் வெளியிடப்படும் நாடு வரைபடங்களில் அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதி சீனாவின் பகுதியாக குறிப்பிடப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், சீனாவிலிருந்து பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இருந்த 30,000 உலக வரைபடத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த உலக வரைபடத்தில், தைவான் தனி நாடாகவும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைக் கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள், 30,000 வரைபடங்களையும் அழித்தனர் என்று சீனா அரசின் அதிகாரப் பூர்வ குளோபல் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த சீனா வெளியுறவுத்துறை பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டங்களுக்கானத் துறைத் தலைவர் பேராசிரியர் லியூ வென்சாங், ‘உலக வரைபடங்களை அழித்த விவகாரத்தில் சீனா செய்தது சரியான ஒன்று மற்றும் தேவையான ஒன்று. ஒரு நாட்டுக்கு இறையான்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் தான் முக்கியமான ஒன்று. சர்வதேச சட்டத்தின்படி தைவான் மற்றும் தெற்கு திபேத் ஆகிய பகுதிகள் சீனாவின் பகுதி’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...