உலகை அச்சுறுத்தும் கொலைக்கார 'கொரோனா'... வைரஸ் தாக்குதல் அறிகுறி & தடுப்பு நடவடிக்கைள்

உலகை அச்சுறுத்தும் கொலைக்கார 'கொரோனா'... வைரஸ் தாக்குதல் அறிகுறி & தடுப்பு நடவடிக்கைள்
  • Share this:
சீனாவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் தருணத்தில் கரோனா வைரஸ் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.

மத்திய சீனாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊஹான் நகரில் கடல் உணவு விற்பனையகத்தில் இருந்து கடந்த டிசம்பர் முதல் பரவத் தொடங்கியது. சீனாவில் 9-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டிருப்பதுடன் மேலும் 450-பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நோய் பரவலிலிருந்து காத்துக்கொள்ள சீன மக்கள் முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்கின்றனர். 2002ம் ஆண்டில் சீனாவில் இருந்து 37 நாடுகளுக்குப் பரவி 774 பேரை பலி கொண்ட சார்ஸ் வைரஸை போலவே கொரோனா வைரசும் உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகளை சோதனையிட இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமான நிலையங்களில் ஏற்பாடுகளை செய்துள்ளன. சீனாவுக்கு செல்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


கொத்து கொத்தாக காணப்படும் கரோனா வைரஸ்களை மைக்ரோஸ்கோப் வழியே பார்த்தால் மகுடம் போல் காட்சி அளிக்கின்றன, லத்தீன் மொழியில் "கரோனா" என்பதற்கு மகுடம் எனப் பொருள். அதை குறிக்கவே கரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கரோனா வைரசை ஆறு வகைகளாக பிரித்துள்ள மருத்துவர்கள் வழக்கமாக விலங்குகளிடையேதான் இவை காணப்படும் என்றும் மனிதர்களின் உயிரை குடிக்கும் கொலைகார வைரஸாக மாறியது இதுவே முதல் முறை என்றும் கூறுகின்றனர்.

இது வழக்கமான சளித்தொல்லை போல் இருமல். தொண்டை செருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் ஆஸ்துமா அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும், முதியோர்- சிறுவயதினர் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தொற்றி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ்.., இருமல், தும்மல், கைகுலுக்கல் மூலம் பரவும் என்றும் நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டபின் வாய், கண்கள் மற்றும் மூக்கை தொட்டால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் காய்ச்சலுக்கு தரும் மருந்துகளையே தரும் மருத்துவர்கள் திரவ உணவு, ஓய்வு மற்றும் தூக்கம் தேவை என்கிறனர். இதற்கு தடுப்பூசி ஏதும் கிடையாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பெரிதும் காப்பாற்றும், விலங்குகள் அருகில் செல்வதையும், உடல் நலம் குன்றியோர் அருகில் செல்வதையும் தவிர்க்கும்படி சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. சீன அரசும் மனிதர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து தாய்லாந்து கொரியா ஜப்பான் வரை பரவி தற்போது அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்தது உலக சுகாதார நிறுவனம் ஜெனிவாவில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. <GFX out>சார்ஸ் பரவியபோது உலகச்சந்தையில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதுபோல் கொரோனா வைரசும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading