அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனைப் போலவே, பல பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சீனா உளவு பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டடங்களுக்கு மேலே சீன ராட்சத பலூன் கடந்த வாரத்தில் பறந்தது. அது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் மிதக்கும் பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
மேலும் அதில் பலூனின் உள்ளே இருந்த சாதனங்களை ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். அங்குலம் அங்குலமாக தேடி வரும் நீர்மூழ்கி வீரர்கள், சீன பலூனில் இருந்த கருவிகள் ஒரு ஜெட் விமானம் அளவுக்கு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் நாடுகளை சீனா தனது பலூன் மூலம் உளவு பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China vs India, Intelligence report, United States of America