சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா..! 1000-க்கும் மேல் உயிரிழப்பு

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா..! 1000-க்கும் மேல் உயிரிழப்பு
கொரோனா
  • Share this:
கொரோனா  வைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை, 40,171 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதலை கண்டறியும் உபகரணங்கள், சீனாவில் பற்றாக்குறையாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீன அரசு அறிவித்துள்ளதை விட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக விளங்கும் ஹுபேய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். சீனாவுக்கு வெளியே ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்குதலில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணர் குழு, சீனாவிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்து தடையை சீன அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து கனடா நாட்டை சேர்ந்த மருத்துவர் புருஸ் அய்ல்வர்ட் தலைமையிலான நிபுணர் குழு சீனா விரைகிறது.

Also See...
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்