சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 425ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425-ஆக உயர்வு
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு 20,400 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.கொரோனாவின் பிறப்பிடமான ஹூபேய் மாகாணத்தில் 11,177 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் 15 பேருக்கும், மக்காவ்வில் 8 பேருக்கும், தைவானில் 10 பேருக்கும் கொரோனா  வைரஸ் தாக்கம் உள்ளது. 21,558 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 425ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் காரணமாக சீனாவில் 349 பேர் உயிரிழந்த நிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகரித்துள்ளது.

இதனால் சீன மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே தங்கள் நாட்டிற்கு தேவையான மருத்துவ முகமூடிகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்