ஹோம் /நியூஸ் /உலகம் /

பத்தே நாட்களில் பிரமாண்ட மருத்துவமனை...! கொரோனா வைரஸை எதிர்கொள்ள வேகம் காட்டும் சீனா

பத்தே நாட்களில் பிரமாண்ட மருத்துவமனை...! கொரோனா வைரஸை எதிர்கொள்ள வேகம் காட்டும் சீனா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமடைந்துள்ள நிலையில், இதற்காக பிரமாண்ட மருத்துவமனையை கட்டும் பணியை சீனா தொடங்கியுள்ளது. 

  கொரோனா என்ற ஒரு புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு பிரம்மாண்ட மருத்துவமனையை சீனா விரைவாக உருவாக்கி வருகிறது. அந்த நாட்டில் இதுவரை இந்த வைரஸ்க்கு நாற்பது பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்ப்பட்ட நகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

  குறிப்பாக நோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அறியப்படும் ஹூகான் மாகாணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டிமுடிக்க அம்மாகாண அரசு முடிவு செய்து அதற்க்கான பணிகளை துவங்கியுள்ளது.

  ஆயிரம் படுக்கைகளை கொண்டதாக கட்டப்படும் இந்த மருத்துவமனை 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிவருகிறது. பிப்ரவரி 3 முதல் புதிய மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  பலநூறு கட்டுமான இயந்திரங்களும் தொழிலாளர்களும் தற்போது இந்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்தே நாட்களில் ஒரு பிரமாண்டமான் மருத்துவமனை என்ற சீனாவின் இந்த வேகம் உலகநாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  Published by:Sankar
  First published: