ஹோம் /நியூஸ் /உலகம் /

26 அடுக்குமாடி கட்டத்தில் மெகா பன்றிப்பண்ணை அமைத்த சீனா.. நோய் பரவும் அபாயம் என நிபுணர்கள் கவலை

26 அடுக்குமாடி கட்டத்தில் மெகா பன்றிப்பண்ணை அமைத்த சீனா.. நோய் பரவும் அபாயம் என நிபுணர்கள் கவலை

26 மாடி மெகா பன்றிப் பண்ணை

26 மாடி மெகா பன்றிப் பண்ணை

சீனாவில் உலகின் மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைந்துள்ள நிலையில், இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaBeijingBeijing

சீனாவின் ஹூபே பிராந்தியத்தில் உலகின் மிகப் பெரிய பன்றிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஹூபேயின் ஏசோ என்ற நகரில் 26 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டு இதில் பன்றிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதை பன்றி அரண்மனை என்று கூறுகின்றனர். ஒரே சமயத்தில் இங்கு 6 லட்சத்து 50 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் ஆண்டுக்கு 12 லட்சம் பன்றிகளை வளர்த்து கறி உணவுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இந்த மெகா அடுக்குமாடி பண்ணையில் தானியங்கி முறையில் செயல்படும் 30,000 உணவு அளிக்கும் மையங்கள் உள்ளன. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட வசதிகளுடன் உருவான இந்த பண்ணையில் இருந்து வரும் கழிவுகளை கொண்டு பயோகேஸ் உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பன்றிக்கறிகளை உண்ணும் நாடாக சீனா உள்ளது. எனவே, பன்றிக்கறியை உற்பத்தி செய்யும் முன்னணி நாடாக சீனா திகழ்கிறது.

இந்நிலையில், 2018 முதல் 2020 காலகட்டத்தில் பன்றி காய்ச்சல் நோய் அங்கு தீவிரமாக பரவி சுமார் 10 கோடி பன்றிகள் அழிக்கப்பட்டன.எனவே, பன்றி வளர்ப்பை உயர்த்த நவீன வழிமுறைகளை பின்பற்ற சீனா இது போன்ற மெகா திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதேவேளை, இது போன்ற திட்டங்கள் மூலம் பெருந்தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏற்கனவே, உலகை வாட்டி வதைத்த கொரோனா பெருந்தொற்று சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனவும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவிய ஜூனோடிக் வகை வைரஸ். இப்படி இருக்க இந்த மெகா பண்ணை திட்டம் போன்ற விபரீத முடிவுகளை சீனா எடுத்துள்ளதை நிபுணர்கள் எச்சரிக்கையுடன் பார்க்கின்றனர்.

First published:

Tags: China, Disease