கொரோனா காலத்தில் எட்டிப்பார்க்கும் பிளேக்: தனிமைப்படுத்தப்பட்ட 146 பேர்: பீதியில் சீனா

சீனாவில் கொரோனா, ஜி4 பன்றிக்காய்ச்சல் வைரஸ் ஆகியவற்றை தொடர்ந்து, கொடூர பிளேக் நோய் கண்டறியப்பட்டது மக்களை அச்சமடையச் செய்துள்ளது. சீனர்களின் உணவுப்பழக்கத்தால் மற்றுமொரு கொள்ளை நோய் எட்டிப்பார்த்துள்ளது

கொரோனா காலத்தில் எட்டிப்பார்க்கும் பிளேக்: தனிமைப்படுத்தப்பட்ட 146 பேர்: பீதியில் சீனா
கோப்புப் படம்
  • Share this:
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, சீனாவின் ஊஹான் கடல் உணவு சந்தையில் இருந்து பரவியதாக அந்நாடு கூறினாலும், கொரோனா எங்கிருந்து பரவியது என்பது குறித்து உலக நாடுகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன.

அண்மையில் சீனாவில் பன்றிகளில் இருந்து பரவும் ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டபோது, அது மனிதர்களை அவ்வளவு எளிதாக தாக்காது என அந்நாட்டு அரசு விளக்கமளித்தது. இந்நிலையில், சீனர்களின் உணவுப்பழக்கம் மற்றுமொரு நோய்க்கு வித்திட்டுள்ளது.

ஜூலை 1-ஆம் தேதி மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் 27 வயது மற்றும் 17 வயது சகோதரர்களுக்கு கொடூர பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. மர்மோட் (Marmot) எனப்படும் ஒருவகை பெரிய அணிலை அவர்கள் வேட்டையாடி உண்டதே நோய்க்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட Bayannur நகரில் பிளேக் நோய் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், மொத்தமுள்ள 4 நிலைகளில், பொதுமக்களுக்கு 3-ஆம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ள Bayannur நகர நிர்வாகம், பிளேக் நோயை பரப்பும் விலங்குகளை வேட்டையாடி உண்ண தடை விதித்துள்ளது.

பிளேக் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மர்மோட் போன்ற விலங்குகளிடம் இருந்து எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் பரவும் பிளேக்கிற்கு, 24 மணி நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும் 5,000க்கும் குறைவான மக்களையே பிளேக் பாதித்துவந்தாலும், உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் மற்றவர்களுக்கு வேகமாக பரவும் ஆபத்து உள்ளது.

இந்தியாவில் 1896 மற்றும் 1921-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் எலிகளில் இருந்து பரவிய பிளேக் பெருந்தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க...

ஜப்பானில் கனமழையால் 50 பேர் உயிரிழப்பு

அரை நூற்றாண்டுக்கு மேலாக உலகளவில் பிளேக் நோயின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும் கொரோனா காலத்தில் எட்டிப்பார்க்கும் இந்த பிளேக் பீதி மக்களையும், அரசுகளையும் கலக்கமடையச் செய்துள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading