முகப்பு /செய்தி /உலகம் / கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரம்.. கத்தியை காட்டி தந்தையை மிரட்டிய 13 வயது சிறுவன்!

கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரம்.. கத்தியை காட்டி தந்தையை மிரட்டிய 13 வயது சிறுவன்!

தந்தையை மிரட்டும் சிறுவன்

தந்தையை மிரட்டும் சிறுவன்

அத்திரமடைந்த 13 வயது சிறுவன், செல்போனை தருமாறு தந்தையிடம் பிடிவாதம் பிடித்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டவும் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaChinaChinaChina

சீனாவில் செல்போனில் கேம் விளையாட விடாமல் தடுத்த தந்தையை 13 வயது சிறுவன் கத்தியை காட்டி மிரட்டிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த சிறுவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்த தந்தை, அதை மறைத்து வைத்துள்ளார். இதனால், அத்திரமடைந்த 13 வயது சிறுவன், செல்போனை தருமாறு தந்தையிடம் பிடிவாதம் பிடித்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டவும் செய்தார். செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன் என அந்த சிறுவன் கூறிய காட்சி பரவி வருகிறது.

சிறுவனின் செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள பலரும், செல்போன் விளையாட்டால் இதுபோன்ற நிலைமைகள் தொடரக்கூடாது என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, இதுதொடர்பாக விசாரித்து வரும் சீன காவல்துறையினர், சிறுவனுக்கு மன நல ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

First published:

Tags: China, Life threat, Video Games