அமெரிக்காவுக்கு அடுத்து, நிலவில் கொடியேற்றி வரலாற்றில் இடம் பிடித்த சீனா

அமெரிக்காவுக்கு அடுத்து, நிலவில் கொடியேற்றி வரலாற்றில் இடம் பிடித்த சீனா

சீனக் கொடி

நிலவில் அமெரிக்கா கொடி ஏற்றி சுமார் 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது இரண்டாவது நாடாக சீனா தன் நாட்டின் கொடியை ஏற்றியுள்ளது.

 • Share this:
  1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார். 1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக் கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா. அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக, கடந்த 2012-ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது. அமெரிக்கா, நிலவில் கொடியேற்றியபோது மனிதர்கள் சென்று அந்தக் கொடியை ஏற்றிவைத்தனர். தற்போது, சீனா சாங்கே 5 என்ற லேண்டர் வாகனத்தின் மூலம் அந்நாட்டின் கொடியே நிலவின் மேற்பரப்பில் ஏற்றிவைத்துள்ளது.

  சீனாவின் கனவுத் திட்டமான சாங்கே 5 லேண்டர் வாகனம் வியாழக் கிழமை வெற்றகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதன்மூலம் வெற்றிகரமாக மூன்றாவது முறையாக சீனாவின் விண்கலன் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 23-ம் தேதி சீனாவின் வென்சாங் விண்வெளி மையத்திலிருந்து சாங்-5 ஏவப்பட்டது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவிலிருந்து பாறைகளை சீனா எடுத்துவரவுள்ளது. அமெரிக்கா, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் எடுத்துவந்த பாறைகள் 3.2 பில்லியன் வருடங்கள் பழமையானவை. சீனா விண்கலன் எடுத்துவரும் பாறைகளைக் கொண்டு நிலவின் வயதை இன்னமும் துல்லியமாக கண்டறியலாம் என்று கூறப்படுகிறது.

  இந்தநிலையில், சீனா அனுப்பிய சாங்கே 5 லேண்டர் நிலவில் மேற்பகுதியில் சீனா நாட்டின் கொடியே ஏற்றி அதனைப் புகைப்படமும் எடுத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை சீனா விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் கொடியேற்றிய இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Karthick S
  First published: