• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவில் தொலைக்காட்சிகளுக்கு இறுகும் பிடி - அதிரடி காட்டும் ஜின்பிங்!

சீனாவில் தொலைக்காட்சிகளுக்கு இறுகும் பிடி - அதிரடி காட்டும் ஜின்பிங்!

china

china

கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆபத்தை கொடுக்கும் என சீன அரசு நம்புவதாக, விமர்சகர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

  • Share this:
பெண் குணாதிசயத்துடன் ஆண்கள் நடிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தேசிய அளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் மதம் என அனைத்திலும் புதிய சீர்திருத்தங்களை புகுந்த, பிரத்யேக திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், பெண் குணாதிசயங்களுடன் ஆண்கள் நடிக்கும் கன்டென்டுகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபாச வார்த்தைகள், தரக்குறைவான மொழி நடை ஆகிவற்றை தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களில் பயன்படுத்தக்கூடாது என கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நிகழ்ச்சிகளை அதிகளவு ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் தரத்தை மேலும் உயர்த்தவும், ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள் மட்டுமின்றி பிரபல நட்சத்திரங்கள் மற்றும் ஆன்லைன் கேம் நிறுவனங்கள், இ காமர்ஸ் நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

18 வயதுக்குட்பட்ட அனைவரும் வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் கேம் விளையாட முடியும். மேலும், அரசு விடுமுறை நாட்களில் கேம் விளையாட அனுமதி உண்டு. இந்த புதிய விதிகளையொட்டி குழந்தைகளின் தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!

சமூகவலைதள நிறுவனங்கள் ஆபாச கன்டென்டுகள் மற்றும் தரக்குறைவான நிகழ்ச்சிகளை புரோமோட் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ள சீன அரசு, ஆபாசத்தை ஊக்குவிக்கும் நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சீன அரசின் புதிய கெடுபிடிகளால் ஆன்லைன் வீடியோ கேமில் கொடிக்கட்டிப் பறந்த சீன நிறுவனங்கள் சிக்கலில் தவித்து வருகின்றன. புதிய கட்டுப்பாடுகளால், அந்த நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதேபோல், இ-காமர்ஸ் வணிகத்தில் கொடிக்கட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனமும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் நட்சத்திரங்களாக இருக்கும் குழந்தைகளை மையப்படுத்தி, எந்தவொரு தொலைக்காட்சியும் நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read:  சட்டமன்றத்தில் பிரிட்டிஷார் காலத்திய ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு..

அரசின் புதிய கட்டுபாடுகளால் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த நடிகர்களின் அக்கவுண்டுகள் மற்றும் அவர்களை புரோமோட் செய்யும் செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. நடிகை ஜாவோ வெய் (Zhao Wei) சமூகவலைதள கணக்கு, திடீரென இல்லை. அவர் நடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சீன அரசின் திடீர் கெடுபிடிகளை நடைமுறைப்படுத்துவதில் தொலைக்காட்சி முதல் தொழிற்துறையினர் வரை பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆபத்தை கொடுக்கும் என சீன அரசு நம்புவதாக, விமர்சகர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: