BBC: பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதித்தது சீனா! : பதிலுக்கு பதிலாக செய்த செயலா?

BBC: பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதித்தது சீனா! : பதிலுக்கு பதிலாக செய்த செயலா?

சீன அதிபர் ஜின்பிங்

கடந்த பிப்ரவரி 4ம் தேதியன்று பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் லைசென்ஸை ரத்து செய்தனர். இந்த சேனலுக்கான லைசென்ஸ் Star China Media Ltd நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாக கூறப்பட்டது.

  • Share this:
பிபிசி நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சீன அதிபர் ஜின்பிங் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாக கூறி பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.

பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சீன தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான National Radio and Television Administration வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சியில் சீனா தொடர்பான செய்திகள் தீவிரமாக மீறப்பட்டுள்ளது, செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், உகந்த முறையிலும் இல்லை. இது சீனாவின் தேசிய எண்ணங்களை காயப்படுத்தியதுடன், தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு தள்ளியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய காரணங்களால் சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் பிபிசி வோல்ட் நியூஸ் தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் ஊடகவியாலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடந்த பிப்ரவரி 4ம் தேதியன்று பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் லைசென்ஸை ரத்து செய்தனர். இந்த சேனலுக்கான லைசென்ஸ் Star China Media Ltd நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாக கூறப்பட்டது.

 

 

 
Published by:Arun
First published: