3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி- அனுமதி தந்தது சீனா

சீனா

மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சீன அரசு அனுமதியளித்துள்ளது.

 • Share this:
  சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு அவசரமாகப் பயன்படுத்த இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடுப்பூசியை எந்த வயதினரிடமிருந்து தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை என சினோவாக் நிறுவனத் தலைவர் யின் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

  ஏற்கனவே சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவாக் மற்றும் சினோபார்ம் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Also Read: இறந்தவர்களெல்லாம் கனவில் வருகிறார்கள்... கனடாவை மிரட்டும் மர்ம நோய்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்!

  சினோவாக் நிறுவனம் தயாரித்த கொரோனாவாக் தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயதுள்ளோர் வரை பயன்படுத்த சீனா அனுமதி அளித்துள்ளது. ஆனால் இது எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு மட்டுமே.

  சினோவாக் இந்த கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட, இரண்டாம் கட்ட சோதனைகளை மட்டுமே முடித்துள்ளது. இதனையடுத்து இந்த வாக்சின் பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு வந்தது சீனா.

  Also Read: ஹெச்.ஐ.வி. பாதித்த பெண்ணின் உடலுக்குள்ளேயே 32 வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்- தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி

  இதே போல் ஏற்கெனவே சீனாவின் சைனோபார்முக்கும் உலகச் சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. உள்நாட்டில் வாக்சின் பயன்படுத்தப்படுவதோடு சீனா வெளிநாடுகளுக்கும் வாக்சின் ஏற்றுமதி செய்து வருகிறது.

  பல நாடுகளுக்கு நன்கொடையாக வாக்சின்களை அளித்தும் வருகிறது சீனா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுவரை சீனாவில் 763 மில்லியன் டோஸ் வாக்சின்கள் செலுத்தப்பட்டுள்ளன. 5 வாக்சின்களை எமர்ஜென்சி பயன்பாட்டுக்காக சீனா அனுமதித்துள்ளது. கோவாக்ஸ் அமைப்புக்கு சீனா 10 மில்லியன் வாக்சின் டோஸ்களை அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: