பேரழிவா? ரத்த சிவப்பு நிறத்தில் வானம் தோன்றியதால் சீனாவில் பரபரப்பு.. காரணம் என்ன?
பேரழிவா? ரத்த சிவப்பு நிறத்தில் வானம் தோன்றியதால் சீனாவில் பரபரப்பு.. காரணம் என்ன?
சிவப்பு நிறத்தில் தோன்றிய வானம்
China sky turns red:திடீரென வானம் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானம் சிவப்பாக இருப்பதை பார்த்து வியப்படைந்த அப்பகுதி மக்கள் துறைமுகத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்கலாமா அல்லது இது பேரழிவின் அறிகுறியாக என குழப்பம் அடைந்தனர்.
சீனாவின் துறைமுக நகரமான ஹோசனில் ( Zhoushan) வானம் இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். எனினும், மிக அரிதான நிகழ்வு காரணமாகவே வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
இந்த உலகம் பல விந்தைகள் அடங்கியதாகவே உள்ளது. அமில மழை, ரத்த மழை என சில விந்தையான நிகழ்வுகள் எங்காவது நிகழ்வது உண்டு. அத்தகைய நிகழ்வு ஒன்றுதான் சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் துறைமுக நகரமான Zhoushan நகரில் 11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நகரில் திடீரென வானம் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானம் சிவப்பாக இருப்பதை பார்த்து வியப்படைந்த அப்பகுதி மக்கள் துறைமுகத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்கலாமா அல்லது இது பேரழிவின் அறிகுறியாக என குழப்பம் அடைந்தனர்.
Red Sky in parts of Zhoushan Zhejiang China Event Occurred on Saturday 7th May 2022 pic.twitter.com/b8Vcc417yu
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலாகின. பலரும் இது மோசமான சகுணம் என கருத்து தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளித்த அதிகாரிகள், துறைமுகத்தில் இருந்த ஒளியின் ஒளிவிலகல் மற்றும் சிதறல் ஆகியவை வானம் சிவப்பு நிறத்தில் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது என தெரிவித்தனர். அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக சூரிய ஒளி தரையை அடைய இயலாமல் சிறப்பு நிறமாக மாறி வானில் மாற்றம் ஏற்பட்டதாகவும் விளக்கியுள்ளனர்.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.