ஹோம் /நியூஸ் /உலகம் /

உலக அமைதிக்காக வடகொரியாவோடு இணையத் தயார்… சீனா அறிவிப்பு!

உலக அமைதிக்காக வடகொரியாவோடு இணையத் தயார்… சீனா அறிவிப்பு!

சீன அதிபர் ஜி ஜின் பிங்

சீன அதிபர் ஜி ஜின் பிங்

உலகை அமைதி வழியில் நடத்திச் செல்லும் நோக்கத்திற்காக வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றி தயார் என சீன அதிபர் ஜி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaNorth koreaNorth korea

உலகை அமைதி வழியில் நடத்திச் செல்லும் நோக்கத்திற்காக வடகொரியாவுடன் இணைந்து பணியாற்றி தயார் என சீன அதிபர் ஜி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

வடகொரியா, சீனா மற்றும் அமெரிக்க என்கிற முக்கோண அதிகார போட்டி இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. தைவான் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் முட்டி மோதி வரும் நிலையில், தென்கொரியாவிற்கு வடகொரியா கொடுக்கும் குடைச்சலுக்காக தென்கொரியாவிற்கு ஆதரவதாக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்திலும் தென் சீனக்கடல் பிராந்தியத்திலும் ஒரு வித பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இத்தகைய பதற்றமான சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பது போல, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவிற்கு எரிச்சல் ஏற்படுத்தி வருகிறார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு… ரஷ்யா மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் பகீர் குற்றச்சாட்டு

ரஷ்ய - உக்ரைன் விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீனா ரஷ்யாவை ஆதரித்து வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில்  சீனாவின் நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. இப்படி சீனா மற்றும் வடகொரியா இரண்டு  நாடுகளுமே பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்கும் வேலையைச் செய்து வருவதாக பல்வேறு நாடுகளும் குற்றம் சாட்டிவரும் நிலையில், உலக அமைதிக்காக வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின் பிங் அறிவித்துள்ளதாக, வடகொரிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அண்டை நாடுகளுக்கு குறிப்பாக தென்கொரியவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து கடந்த வாரம் வரை இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஏழு முறை அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளார் கிம் ஜோங் உன்.

இந்தோனேஷியாவில் கடந்த வாரம்  நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்று கூடி பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்த நேரம்தான் கிம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணையை சோதித்து  பார்த்தார்.

ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் பைடனை ஜி ஜின் பிங் சந்தித்து பேசினார். அப்போது கூட வடகொரியாவின் அச்சுறுத்தலை நிறுத்த சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பைடன் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு நேர் மாறாக சீன அதிபர் வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது என வடகொரியா கூறியுள்ளது.

சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

வடகொரிய கடைசியாக நடத்திய ஏவுகணை சோதனை முக்கியமாக பார்க்கப்படுகிது. நீண்ட துரம் சென்று தாக்கும் அந்த ஏவுகணையைக் கொண்டு வடகொரியாவால் அமெரிக்காவைக் கூட தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ரொசாரியோ ராய்

First published:

Tags: China, North korea