• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • China COVID: சீனாவில் மீண்டும் கொரோனா: புதிய டெல்டா வகை கொரோனா பரவலால் 460 விமானங்கள் ரத்து

China COVID: சீனாவில் மீண்டும் கொரோனா: புதிய டெல்டா வகை கொரோனா பரவலால் 460 விமானங்கள் ரத்து


சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால், ஒரே நாளில் 460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

  • Share this:
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. கடுமையான ஊரடங்கையும், சரியான முறையில் தனிமனித இடைவெளியையும் கடைபிடித்ததால் கொரோனா தாக்குதலில் இருந்து அந்த நாடு மீண்டு வந்தது. பல இடங்களில் முக கவசத்திற்கு விடை கொடுத்த மக்கள், சுதந்திரமாக சுற்றி வந்தனர்.

    இந்த சூழலில் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் திடீரென கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. சனிக்கிழமை அங்கு ஆறு பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷென்சென் (Shenzhen) விமான நிலைய உணவகத்தில் பணிபுரியும் 21 வயது பெண்ணுக்கு புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகளும் மூடப்பட்டன. பெண்ணுடன் தொடர்பில் இருந்த 110 பேரை கண்டறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

    ALSO READ |  அடுத்த 2 அல்லது 4 வாரத்தில் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - மகாராஷ்டிரா நிபுணர் குழு எச்சரிக்கை

    Shenzhen பகுதியில் மட்டும் இதுவரை உள்ளூர் மக்கள் 430 பேருக்கும், வெளியூரிலிருந்து வந்த 110 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனைகளை செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Foshan நகரில் 13 நாட்களுக்குப் பிறகு 83 வயது முதியவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.டாங்குவான் நகரில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் 13 பகுதிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    ALSO READ |  டெல்டா வைரஸ் : இங்கிலாந்தில் அதிகரிக்கும் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

    டாங்குவான் நகரிலிருந்து வெளியேற வேண்டுமானால், 48 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டாலும், சமூக பரவல் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குவாங்டாங் மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: