ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா வைரஸ்: மீண்டும் அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா வைரஸ்: மீண்டும் அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா

சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern | chinachinachinachinachina

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனாவால் ஏற்பட போகும் பாதிப்புகள், இந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.

2019ல் கொரோனா பரவியதில் இருந்து பல வகைகளில் மாற்றமடைந்துள்ளது. அனைத்து மாறுபாடுகளில் ஓமிக்ரான் வகை பாதிப்பு ஓராண்டு மேலாக ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக உள்ளது. தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு ஒமிக்ரான் BF.7 வகை மாறுபாடு. இந்த வகை மக்களை எளிதில் பாதிக்கிறது.

தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் இந்த மாறுபாடு தனிநபர்களை சமமாக பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கைகளின்படி, BF.7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை BF.7 மாறுபாடு தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முட்டாள் ஒருவர் கிடைத்த பின் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலகுவேன் - எலான் மஸ்க்

சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படும் நிலையில், அடுத்த சில மாதங்களில் சுமார் ஒரு 10 லட்சம் இறப்புகள் ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: China, Corona spread