இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ்.. சீனா விதித்த தடை..

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ்.. சீனா விதித்த தடை..

மீன்கள் இறக்குமதிக்கு சீனா தடை

மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்காக இறக்குமதிக்கு ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.


  இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால், இறக்குமதிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.  இந்தியாவின் பாசு இன்டர்நேசனல் நிறுவனம் சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களில் மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
  Published by:Gunavathy
  First published: