• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஓவர் டைம், பணிச்சுமைக்கு எதிராக சீனாவில் தொடங்கிய ‘996’ பிரச்சார இயக்கம்

ஓவர் டைம், பணிச்சுமைக்கு எதிராக சீனாவில் தொடங்கிய ‘996’ பிரச்சார இயக்கம்

Worker Lives matter

Worker Lives matter

2019ம் ஆண்டு சில தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுக்கு சுமத்தப்பட்ட கூடுதல் வேலை நேரத்திற்கு எதிராக GitHub-ல் இந்த இயக்கத்தினை தொடங்கினர்.

  • Share this:
சீனாவில் கூடுதல் வேலை நேர கலாச்சாரத்தை எதிர்த்து ‘996’ எனும் பிரச்சார இயக்கத்தை பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

Worker Lives Matter எனும் இந்த பிரச்சார இயக்கத்துக்கு 996 என பெயரிட்டுள்ளனர். தொழில்நுட்பம், நிதித்துறை என பல்வேறு தனியார் துறையினரும் இந்த இயக்கத்தில் இணைந்து தங்களின் பணி நேரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

996 என்றால் என்ன?

சீனாவில் பல்வேறு துறையைச் சேர்ந்த பணியாளர்களும் காலை 9 மணி தொடங்கி இரவு 9 மணி வரை, வாரத்தில் ஆறு நாட்களும் பணிபுரிந்து வருவதால் 996 என இந்த இயக்கத்துக்கு பெயரிட்டுள்ளனர்.

டெக் நிறுவன முதலைகளான டென்செண்ட் ஹோல்டிங்ஸ், அலிபாபா குழுமம், பைட் டான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 4000க்கும் மேலானவர்கள் ஸ்பிரெட் ஷீட்டில் தங்கள் வேலை நேரங்களை பகிர்ந்துள்ளனர்
GitHub என்ற தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் முகப்பு பக்கத்தில் ‘நாங்கள் தொழிலாளர்களும் வாழ வேண்டும்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

Also Read: 17,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்கும் விப்ரோ நிறுவனம்!

2019ம் ஆண்டு சில தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுக்கு சுமத்தப்பட்ட கூடுதல் வேலை நேரத்திற்கு எதிராக GitHub-ல் இந்த இயக்கத்தினை தொடங்கினர். தற்போது இந்த இயக்கத்தில் அதிகமானோர் இணைந்து குரல் கொடுத்து வருவதால் நாடு முழுவதும் கூடுதல் வேலை நேரத்திற்கு எதிரான குரல் வலுவாக ஒலித்து வருகிறது. கூடுதல் பணி நேரம் மற்றும் பனிச்சுமை காரணமாக சில தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.

இதனைத்தொடர்ந்து சீன அதிபர் ஜிங் பிங் தனியார் நிறுவனங்கள் கூடுதல் பணி நேர விவகாரத்தில் ஊழியர்களுக்கு சிரமமின்றி நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Also Read:  மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான் – முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

இதனைத்தொடர்ந்து தற்போது பொதுமக்களிடையே பரலவான எதிர்ப்பு அலை ஏற்பட்டதையடுத்து பைட் டான்ஸ், குவாய்சோ போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடுதல் பணி நேரத்தை குறைக்க தேவையான முன்னெடுப்புகளில் இறங்கியுள்ளனர். மேலும் சில நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுக்க வேண்டும் என்ற தங்களின் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: