காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் உள்ள விலங்குகள் சரணாலயத்திலிருந்த மூன்று சிம்பன்சி குட்டிகளைக் கடத்தல்காரர்கள் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
செப்டம்பர் 9ம் தேதி விடியக் காலை 3 மணிக்குக் கடத்தல்காரர்கள் சிம்பன்சி குட்டிகள் இருந்த சரணாலயத்திற்குள் நுழைத்துள்ளனர். சரணாலயத்தில் மீட்கப்பட்ட குட்டி சிம்பன்சிகளைப் பாதுகாத்து வைத்துள்ளனர். மொத்தம் ஐந்து சிம்பன்சி குட்டிகள் அங்கு இருந்த நிலையில் அதில் மூன்று குட்டிகளைக் கடத்தல்காரர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.
அந்த சரணாலயத்தின் நிறுவனரான ஃபிராங்க் சாண்டேரோ இது குறித்துத் தெரிவிக்கையில், அவர் வந்து பார்க்கும் போது மீதும் உள்ள இரண்டு குட்டிகள் சமையல் அறையிலிருந்து என்றும் கடத்தப்பட்ட சிம்பன்சி குட்டிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளார்.
சீசர், ஹுசைன் மற்றும் மோங்கா என்ற மூன்று குட்டிகளை புகைப்படம் எடுத்து கடத்தல்காரர்கள் அவரின் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஒரு பெரிய தொகையைக் குரங்கு குட்டிகளுக்குப் பதிலாகக் கேட்டுள்ளனர். மேலும் கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் குட்டிகளுக்குப் போதை மருந்து கொடுத்துக் காயப்படுத்தப்படும் என்று மிரட்டியுள்ளனர்.
முதலில் கடத்தல்காரர்களுக்கு சிம்பன்சி குட்டிகளைக் கடத்துவது திட்டமாக இல்லை. அந்த சரணாலயத்தில் உரிமையாளரின் மூன்று குழந்தைகளை கடத்தத்தான் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வராததால் அதற்குப் பதிலாகக் குரங்கு குட்டிகளைக் கடத்தியதாகக் கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read : அவளுக்கு 12 வயது... எனக்கு 30 வயது... சர்ச்சையாக பேசி சிக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இந்த நிலையில் இந்த சம்பவம் பெரிய அளவில் வெடித்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால் இது போன்று செயல்கள் எதிர்காலத்தில் தொடரும் என்று கருதிய சரணாலய நிறுவனர் காவல்துறை மூலம் குரங்கு குட்டிகளை மீட்டும் பணியில் இறங்கியுள்ளார்.
காங்கோ நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் இது குறித்துத் தெரிவிக்கையில், கடத்தல் காரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் இந்த மாதிரியான செயல் இயற்கைக்கு மாறாது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chimpanzee, Kidnap