அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான FDA அண்மையில் சிறுவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி அளித்தது. சிறாருக்கு தடுப்பூசி பரிசோதனையில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.
அந்நாட்டில் 20 ஆயிரம் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. 12முதல் 15 வயதுள்ள 1 கோடியே 70 லட்சம் சிறுவர்களுக்கு
தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள், கடற்கரை, பூங்காக்களிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெலவேர், ஜியார்ஜியா, மெயின் மாகாணங்களில் கடந்த திங்கட்கிழமையே குழந்தைகளுக்கு
தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கினாலும் அதிகாரபூர்வமாக அனைத்து மாகாணங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பைசர் நிறுவனமும்--biontech நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்தியாவில் 2 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அமெரிக்காவில் சிறுவர்களுக்கு அதனை செலுத்த தொடங்கியுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.