நான்ஸ்டிக் பாத்திரத்தால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு உள்ளதாம்... ஆய்வில் தகவல்

நான் ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் பெர்ஃப்லோரால்க்ல் (perfluoroalkyl) என்ற கெமிக்கலானது ஆணுறுப்பின் நீளத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் தரத்தையும் குறைக்கிறதாம்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 5:48 PM IST
நான்ஸ்டிக் பாத்திரத்தால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு உள்ளதாம்... ஆய்வில் தகவல்
கோப்புப்படம் (Image: Juice Images RF)
Web Desk | news18
Updated: December 6, 2018, 5:48 PM IST
நான்ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள கெமிக்கல் பூச்சு காரணமாக ஆணுறுப்பு சிறியதாக வாய்ப்பு உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, சமையலுக்காக தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உணவோடு ஒட்டாது என்பதால், இந்த வகை பாத்திரங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கவே செய்கிறது.

இவ்வகை பாத்திரங்கள் சர்க்கரை நோய்க்கு வருவதற்கு காரணியாக இருக்கலாம் என்று கடந்தாண்டு ஸ்வீடன் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆண்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இத்தாலி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் பெர்ஃப்லோரால்க்ல் (perfluoroalkyl) என்ற கெமிக்கலானது ஆணுறுப்பின் நீளத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் தரத்தையும் குறைக்கிறதாம். Journal of Clinical Endocrinology & Metabolism என்ற தளத்தில் இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ: கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டுமா? - ஆ.ராசா பதில்

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்