நிலவின் மறுபக்கத்தை தொட்டு வரலாறு படைத்தது சீனா!

நிலவின் மறுபக்கத்தை முதன்முதலாக சீன விண்கலமான Chang'e 4 அடைந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 3, 2019, 5:48 PM IST
நிலவின் மறுபக்கத்தை தொட்டு வரலாறு படைத்தது சீனா!
சேஞ்ச் 4 விண்கலம்
Web Desk | news18
Updated: January 3, 2019, 5:48 PM IST
நிலவின் மறுபக்கத்தையும் அடைந்து வரலாறு படைத்துள்ளது சீன விண்கலம்.

விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் யாரும் எட்டாத மைல்கல்லை சீனா அடைந்துள்ளது. நிலவின் மறுபக்கத்தை சீன விண்கலம் இன்று அடைந்தது. சீன நேரப்படி இன்று காலை 10.26 மணி அளவில் இதுவரை யாரும் சென்றடையாத எந்த அறிவியல் தொழில்நுட்பமும் புகாத நிலவின் மறுபக்கத்தை சீன விண்கலமான Chang'e 4 அடைந்துள்ளது.

நிலவும் பூமியும் ஒரே சுற்று வட்டப்பாதையில் பயணிப்பதால் நிலவின் மறுபக்கம் இதுவரையில் காணப்படாத இருண்ட பகுதியாக இருந்தது. இதுவரையில் நிலவின் மறுபக்கத்தை பார்க்க முடிந்ததே தவிர யாரும் அங்கு சென்று அடைந்ததில்லை. இந்த வரலாறை மாற்றி எழுதி உள்ளது சீனா.

March-3B என்ற ராக்கெட் மூலம் Chang'e 4 நிலவை நோக்கிய தனது பயணத்தை சீனா தொடங்கியது. வானியல் கூறுகளை ஆராய்தல், நிலவின் நிலப்பரப்பு, தாதுக்கள், கதிர்வீச்சின் அளவு, அணுக்கள் மற்றும் சூழல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த விண்கலம் சீனாவினால் அனுப்பப்பட்டது. வானியல் அறிவியலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை 2030-க்குள் முந்தி முதலிடத்தைக் கைப்பற்ற உழைத்த சீனா அதன் வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் பார்க்க: வருங்கால தலைமுறைக்காக பிளாஸ்டிக்கை கைவிடுங்கள் - நடிகர் விவேக்
First published: January 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...