ஹோம் /நியூஸ் /உலகம் /

 சீனாவில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை- புதிய அலைக்கு ஆயத்தமாகிறதா?

 சீனாவில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை- புதிய அலைக்கு ஆயத்தமாகிறதா?

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

cases increase in china: சீனாவில் ஜூன் 10 ஆம் தேதியில் 210 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன, அவற்றில் 79 பேருக்கு அறிகுறிகளும்  131  பேருக்கு அறிகுறிகள் இல்லை என்றும்  தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

2019 இல் வூஹானில் கண்டறியப்பட்ட  கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. 3 அலைகளைக் கடந்து இப்போது தான் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆ னால் இன்னும் நோய்த்தொற்றுகள் உறுதி எண்ணிக்கை வந்து கொண்டு இருக்கும் நிலையில் சீனாவில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த அலை உருவாகப் போகிறதோ என்ற அச்சத்தில் சீன மக்கள் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சீனத் தலைநகர் பீஜிங்கில் தோற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. பாதிக்கப்படும் எண்ணிக்கை மட்டுமின்றி இறப்பின் எண்ணிக்கையும் திடீரென  உயர்ந்தது.அதைக் கட்டுப்படுத்த சீன அரசு ஊரடங்கு, உள்ளிட்டக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

இதையும் படிங்க... கட்டிமுடித்து 2 வருடம் கழித்து திறக்கப்பட்ட ரஷ்யா -சீனா பாலம்!

இதனை அடுத்து 2 வாரங்களுக்கு முன்னிருந்து பீஜிங் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பீஜிங்கில்   வணிக சந்தைகள் அதிகம் காணப்படும் சாயோயாங் பகுதியில் தொற்று  எண்ணிக்கை வேகம் எடுத்துள்ளது.

அங்குள்ள ஹெவன்  சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில் மட்டும் சுமார் 61 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்களின் தொடர்புகள் என்று பார்க்கும் போது 115 தொற்றுகள் கணக்கிடப்பட்டுள்ளன. அந்த மதுபான விடுதி கொரோனா பரவலின் மையமாக அடையாளப்படுத்தபட்டு அங்கு வந்து சென்ற அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்று  வருகிறது.

அதோடு சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காய் நகரத்தில் அழகு நிலையம் ஒன்று பரவலின் மையமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வடகொரியாவில் இருந்து காத்து வாக்கில் பரவுமா கொரோனா.. ஜன்னலை மூடி வைக்க சொன்ன சீனா!

சனிக்கிழமையன்று, ஷாங்காய் நகரம் ஏழு புதிய உள்ளூர் அறிகுறி கொண்ட நோயாளிகளை பதிவுசெய்தது. மேலும் ஒன்பது புதிய உள்ளூர் அறிகுறியற்ற நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில், சீனாவில் ஜூன் 10 ஆம் தேதியில் 210 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன, அவற்றில் 79 பேருக்கு அறிகுறிகளும்  131  பேருக்கு அறிகுறிகள் இல்லை என்றும்  தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: China, CoronaVirus