• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை

தாலிபான்கள்

தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

  • Share this:
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்றும் திட்டம் தயார்நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை அடுத்து, தாலிபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றினர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் இருக்கிறது. ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

    முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில், இந்தியர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. காபூலில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரக ஊழியர்களின் உயிரை எவ்வகையிலும் பணயம் வைக்க மாட்டோம்.

    அவர்களை அவசரமாக வெளியேற்ற வேண்டி இருந்தால், அதை செயல்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. கள நிலவரத்தை பொறுத்து, அவர்களை வெளியேற்ற தொடங்குவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், காபூலில் இருந்து இந்தியர்களையும், இந்திய தூதரக ஊழியர்களையும் அவசரமாக அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Read More : காபுலின் அனைத்து பக்கங்களிலிருந்தும் நுழைந்த தலிபான்கள் - புகைப்படங்கள்

    ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

    Must Read : ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பியோட்டம்! - தலிபான் ஆட்சியை பிடிக்கிறது!

    அத்துடன், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால், ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுலை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கானி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலம் 120-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: