ஹோம் /நியூஸ் /உலகம் /

சகல வசதிகளுடன் கூடிய இந்த தீவு வெறும் ₹ 3.8 கோடிக்கு விற்பனையாம்..!

சகல வசதிகளுடன் கூடிய இந்த தீவு வெறும் ₹ 3.8 கோடிக்கு விற்பனையாம்..!

இகுவானா தீவு

இகுவானா தீவு

தனி தீவு, தனி வீடு அதனால் இந்த தீவு தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இன்றைய தேதியில் ஒரு வீடு வாங்குவதே பெரிய சாதனையாக  மாறி வருகிறது.  லோன் எடுத்து அதை கட்டி முடிப்பதற்குள் வாழ்க்கையே பாதி முடிந்து விட்டது என்று ஆகி விடுகிறது. ஆனால், மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு முழு  தீவையும் வெறும் 4 கோடிக்கு விற்கிறார்களாம். அதிர்ச்சியாகத் தோன்றினாலும்  இது  உண்மைதான்.

மத்திய அமெரிக்க பகுதியில் உள்ள நிகரகுவாவின் புளூஃபீல்ட் கடற்கரையிலிருந்து 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தி இகுவானா தீவு எனப்படும் எரிமலை தீவு தான் தற்போது  விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு தீவே விற்பனைக்கு என்றால் எத்தனை ஆயிரம் கோடியோ என்று எல்லாம் நினைக்க வேண்டாம். இதன் விலை வெறும் ரூ. 3.76 கோடி தானாம்.

privateislandsonline.com என்ற இணையதளத்தில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீவு , 5 ஏக்கர் பரப்பளவில், சுற்றி  தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களால் சூழப்பட்ட ஒரு சுதந்திரமான இடமாக உள்ளது.

அது மட்டும் இல்லாமல் இகுவானா தீவில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் கொண்ட வீடு ஒன்றும் இருக்கிறதாம்.  உணவு சாப்பிடுவதற்கு டைனிங் அறை, பார் மற்றும் நீச்சல் குளம் என்று சகல வசதிகளும் இதில் அடங்கும்.  தீவின் மறுபுறத்தில் ஊழியர்களுக்கான  தங்குமிடங்கள் கூடுதலாக இருக்கிறதாம். தீவின் மேற்கில் ஒரு மீன்பிடி தளம் கூட உள்ளது. எல்லாம் நவீன கட்டிட கலையால் நிரம்பி இருக்கிறதாம்.

தனி தீவு, தனி வீடு அதனால் இந்த தீவு தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வைஃபை, ஃபோன் மற்றும் டிவி சிக்னல்கள் இருப்பதால் இகுவானா தீவு வெளி உலகத்தோடு முழுமையாகத் தொடர்பில் தான் உள்ளது

மேலும், இந்த தீவில் ஒரு நம்பகமான ஊழியர்கள் குழுவும் உள்ளது. வீடு பராமரிப்பு, தீவு பராமரிப்புக்கென்று பணியாட்களும் ஆன்-சைட் மேலாளரும் ஏற்கனவே இருக்கின்றனர். இதன் தற்போதைய உரிமையாளர் இதை கவனிக்க முடியாததால் தற்போது விற்க முடிவு செய்துள்ளார். 

தெளிவான நீல-பச்சை நீர் சூழ்ந்த இந்த தீவில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்குமாம். உங்களுக்கு தனி தீவு வாங்க ஆசை இருந்தால் இந்த தீவின் விற்பனை விவரங்களை பார்த்து ஒரு அப்ளிகேஷன் போட்டு விடுங்க....

First published:

Tags: America, Island