முகப்பு /செய்தி /உலகம் / WATCH | வீடியோ கேம் கருவியை பிடுங்கிய ஆசிரியை... சரமாரியாக குத்துவிட்ட மாணவன்.. அதிர்ச்சி வீடியோ..!

WATCH | வீடியோ கேம் கருவியை பிடுங்கிய ஆசிரியை... சரமாரியாக குத்துவிட்ட மாணவன்.. அதிர்ச்சி வீடியோ..!

வெளியான சிசிடிவி காட்சி

வெளியான சிசிடிவி காட்சி

ஆத்திரம் குறையாத அந்த மாணவர், 15 முறைக்கு மேல் ஆசிரியையை மீது தாக்குதல் நடத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • internat, IndiaAmericaAmerica

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பாம் கோஸ்ட் (Palm Coast) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் வீடியோ கேம் உபகரணத்தை வகுப்பறையில் வைத்திருந்ததால், மாணவனிடம் இருந்து ஆசிரியை வாங்கி வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி வளாகத்திலேயே ஆசிரியையை தாக்கினார். இதனுடைய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் வேகமாக ஓடிவந்து ஆசிரியையை மாணவர் தாக்கியதால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். எனினும், ஆத்திரம் குறையாத அந்த மாணவர், 15 முறைக்கு மேல் ஆசிரியை மீது கையால் ஓங்கி குத்துகுகிறார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த மாணவனை கட்டுப்படுத்தி, தாக்குதலுக்குள்ளான ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்விற்கு பிறகு 17 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.

First published:

Tags: America, Attacked, School student, Teacher