97 பேர் உயிரிழந்த விமான விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தரையிறங்கும் நேரத்தில் விமானம் நிலை தடுமாறி கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

97 பேர் உயிரிழந்த விமான விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சிசிடிவி காட்சிகள்
  • News18
  • Last Updated: May 23, 2020, 3:21 PM IST
  • Share this:
பாகிஸ்தானில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக விமான சேவைகளை ரத்து செய்திருந்த பாகிஸ்தான் அரசு, கடந்த 16-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் நேற்று லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது.

அதில் 99 பயணிகளும், 8 விமான ஊழியர்களும் பயணித்தனர். கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம், மூன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதியான மாடல் காலனியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.


இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தரையிறங்கும் நேரத்தில் விமானம் நிலை தடுமாறி கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

லாகூரில் இருந்து கராச்சிக்கு ஒன்றரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய விமானம், கோர விபத்தில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading